அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் 1,071 மாணவ-மாணவிகளுக்கு ரூ.75 லட்சம் கல்வி உதவித்தொகை
அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில், 1,071 மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.75 லட்சம் கல்வி உதவித்தொகையை வேலூர் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்கினார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிக்கல்வி முடித்து குடும்ப பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக உயர்கல்வியில் சேர முடியாதவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கி உயர்கல்வியில் சேருவதற்கு உதவி செய்யும் வகையில், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனை தலைவராக கொண்டு அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டு, அதன் சார்பில் உயர்கல்வி பயில நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி வி.ஐ.டி.யில் நடந்தது. அறக்கட்டளை உறுப்பினர் மயிலாம்பிகை குமரகுரு வரவேற்றார். அறக்கட்டளை தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி அறக்கட்டளை மூலம் வேலூர் மாவட்டம் மற்றும் ஜவ்வாது மலைப்பகுதியைச் சேர்ந்த உயர்கல்வி பயிலும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 1,071 பேருக்கு கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூ.75 லட்சத்தை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலமாக 6-வது ஆண்டாக ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் கல்விக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை மொத்தம் 3,911 பேருக்கு ரூ.3 கோடியே 74 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. உதவித்தொகை பெற்றவர்களில் 750 பேர் பல்வேறு நிறுவனங்களில் பணியில் சேர்ந்துள்ளனர், என்றார்.
கொல்கத்தா ஏ.பி.பி.குரூப் நிர்வாக இயக்குனர் டி.டி.புர்கய்ஸ்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசுகையில், இந்த அறக்கட்டளை மூலம் பயன் பெற்றவர்களில் பெரும்பாலும் மாணவிகள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் தான் குடும்பத்தையும், சமுதாயத்தையும் வளர்க்க முடியும், அதன் மூலம் நாடு வளரும், என்றார்.
ஈரோடு சக்தி மசாலா தொழில் அதிபர் பி.சி.துரைசாமி பேசுகையில், இந்தத் திட்டம் பாராட்டத்தக்கது. சமுதாய வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் இது உதவியாக இருக்கும். அறக்கட்டளை மூலம் உதவி பெற்றவர்களில் பணியில் சேர்ந்து வருவாய் ஈட்டும்போது உங்களை போல் மற்றவர்களுக்கும் பயன்பெறும் வகையில் நீங்கள் யாராவது ஒருவரை தத்து எடுத்துக் கொள்ள வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில் வி.ஐ.டி.துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர் சாந்திதுரைசாமி, ரோட்டரி சங்க ஆளுனர் கே.ஜவுரிலால் ஜெயின், உறுப்பினர்கள் ஜெ.லட்சுமணன், புலவர் பதுமனார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சி.கெய்சர்அகமது நன்றி கூறினார்.

Related Tags :
Next Story