விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 9 Nov 2017 4:00 AM IST (Updated: 9 Nov 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). இவர் கடந்த 22.6.15-ம் ஆண்டு பாப்பாக்குடி கடை வீதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி தனவள்ளி, மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் இதுகுறித்து தனவள்ளி அரியலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

பஸ் ஜப்தி

வழக்கை விசாரிந்த நீதிபதி 5.11.16 அன்று விபத்தில் உயிரிழந்த ராஜேந்திரன் குடும்பத்துக்கு ரூ.6 லட்சத்து 28 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இழப்பீடு வழங்காத நிலையில், தனவள்ளி நிறைவேற்றுதல் மனுவை 11.7.17 அன்று கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அரியலூர் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினர். 

Related Tags :
Next Story