வைத்தீஸ்வரன்கோவிலில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜி.கே.வாசன் பார்வையிட்டார்
வைத்தீஸ்வரன்கோவிலில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜி.கே.வாசன் பார்வையிட்டார்.
சீர்காழி,
நாகை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் விளக்குமுக தெருவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள மக்களை சந்தித்து, மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மழைநீரில் மூழ்கிய வயல்களை பார்வையிட்டார். பின்னர் ஜி.கே.வாசன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குடிமராமத்து பணி
சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம் பகுதியில் பெய்த மழையால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும், வயல்களில் தேங்கிய மழைநீர் வடியாமல் உள்ளது. இதற்கு ஆறுகள், வாய்க் கால்கள், ஏரிகள், வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததே காரணமாகும். குடிமராமத்து பணிகளை அரசு அறிவித்து இருந்தாலும், அதன் செயல்பாடுகள் எந்த இடத்திலும் முழுமைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது. எனவே அரசியலுக்கு இடம் கொடுக்காமல் எல்லா கட்சிகளும் ஓர் அணியில் நின்று ஏழை-எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கக்கூடாது என்ற உணர்வோடு இனிவரும் காலங்களில் நீர்நிலைகளை தூர்வாரும் பணி, குடிமராமத்து பணி ஆகியவற்றை இடைத்தரகர்கள் இல்லாமல் அரசு முறையாகவும், சரியாகவும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் இன்னும் அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபோன்ற சமயங்களில் அதிகாரிகள் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். பயிர்க் காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்துள்ளனர். நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் வயல்களில் பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழிந்த நிலையில் உள்ளது. இது வேதனை அளிக்கிறது. விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் இந்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு நியாயமான முறையில் பதில் கூற வேண்டும்.
இழப்பீட்டுத்தொகை
நாகை மாவட்டத்தில் மீனவர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.5 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த மழையால் பாதிப்பு இல்லை என்று யாரும் கூறமுடியாது. அப்படி கூறினால் அது சரியான தகவல் அல்ல. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, நாகை மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர், மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் கார்த்தி, நகர தலைவர் கனிவண்ணன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் வரதராஜன், வட்டார தலைவர்கள் நாகேந்திரன், சுந்தரவடிவேலு, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தம்பிதுரை, சின்னமரைக்காயர், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் நிர்மல், வட்டார இளைஞர் அணி தலைவர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story