மன்னார்குடியில் சாலையோர கடையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் டீ குடித்தார்
மன்னார்குடியில் சாலையோர டீக்கடையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் டீ குடித்தார்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மழைவெள்ளத்தால் பல்வேறு இடங்களில் பயிர்கள் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோட்டூர் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்கு நேற்று வந்தார். அவருக்கு மன்னார்குடி ருக்மணி பாளையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் முன்னாள் மத்தியமந்திரி டி.ஆர்.பாலு, தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன், தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து கோட்டூர் நோக்கி காரில் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். மன்னார்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடை முன்பு கார் சென்றபோது திடீரென காரை நிறுத்த சொன்ன மு.க.ஸ்டாலின் காரில் இருந்து கீழே இறங்கினார். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சாலையோர கடைக்கு சென்ற அவர், நிர்வாகிகளுடன் அமர்ந்து டீ குடித்தார். இதைத்தொடர்ந்து அவர், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காரில் புறப்பட்டு சென்றார்.

Related Tags :
Next Story