பிறப்பு, இறப்பு பதிவுசெய்ய புதியமென்பொருள் செயல்பாடு குறித்து பயிற்சி
வேலூர் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு பதிவு செய்ய இணையவழி புதிய மென்பொருள் செயல்பாடு குறித்து 800 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேலூர்,
தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். பிறப்பு, இறப்பு மாவட்ட கூடுதல் பதிவாளர் மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் முன்னிலை வகித்தார். பிறப்பு, இறப்பு இணை பதிவாளர் சுமதி புதிய மென்பொருளின் பயன்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கி பயிற்சி அளித்தார்.
அப்போது நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் பிறப்பு, இறப்பு பதிவிற்காக வெவ்வேறு மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இணையவழி புதிய மென்பொருள் மூலம் பிறப்பு, இறப்பு நிகழும் மருத்துவ மனைகளே அவற்றை பதிவு செய்யும் படிவத்தில் உள்ள தகவல்களை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளருக்கு தெரியப்படுத்த முடியும்.இதன் மூலம் 100 சதவீதம் பச்சிளம் குழந்தைகளுக்கு விடுபடாமல் வழங்குவது உறுதிப்படுத்தப்படும். மேலும் பிறப்பு, இறப்பு, இறந்து பிறந்த குழந்தைகள், மகப்பேறு மரணம் மற்றும் சிசு மரணம் ஆகியவற்றை 100 சதவீதம் விடுபடாமல் பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் இதற்கான பயிற்சி வகுப்பு 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி மற்றும் துப்புரவு அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்ந்த நர்சுகள் மற்றும் இதர அலுவலர்கள் என மொத்தம் 800 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.Related Tags :
Next Story