விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 10 Nov 2017 4:15 AM IST (Updated: 10 Nov 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் மரணம் அடைந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து கோவை நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை,

கோவை கவுண்டம்பாளையம் காந்திநகரை சேர்ந்தவர் விவேகானந்தன்(வயது 60). இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 22.1.2008 அன்று விவேகானந்தன் இரு சக்கர வாகனத்தில் கணபதி பகுதியில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் விவேகானந்தன் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதைத் தொடர்ந்து விவேகானந்தன் மனைவி கலாமணி கோவை 3-வது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கணவர் மீது மோதிய கோவை அரசு பஸ் நிர்வாகம் இழப்பீடு தரக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதில் விவேகானந்தன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு கடந்த 2011-ம் ஆண்டு நீதிபதி தீர்ப்புக் கூறினார்.

அரசு பஸ் ஜப்தி

ஆனால் கோவை அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு கலாமணி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் இழப்பீடு மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.3 லட்சத்து 87 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் அதன்பின்னரும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால்கோவை அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்து கொண்டு வர அவர் உத்தரவிட்டார். இதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள் காந்திபார்க்கில் நின்றிருந்த 7-ம் எண் அரசு டவுன் பஸ்சை ஜப்தி செய்து கோவை கோர்ட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தினார்கள். 

Related Tags :
Next Story