தொழில் அதிபர் வீடு,மர வியாபாரியின் கடை உள்பட கோவையில் 6 இடங்களில் சோதனை


தொழில் அதிபர் வீடு,மர வியாபாரியின் கடை உள்பட கோவையில் 6 இடங்களில் சோதனை
x
தினத்தந்தி 10 Nov 2017 4:30 AM IST (Updated: 10 Nov 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபர் வீடு,மர வியாபாரியின் கடை உள்பட கோவையில் 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

கோவை,

கோவையில் மணல் குவாரிகளை ஏலம் எடுத்து நடத்தி வந்தவர் தொழில்அதிபர் ஆறுமுகசாமி. இவர் செந்தில்குழுமம் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். தொழில் அதிபர் ஆறுமுகசாமியின் அலுவலகங்களில் ராம் நகர் சென்குப்தா வீதியிலும், கோவை- அவினாசி சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் 6-வது தளத்திலும் உள்ளன. அவரது வீடு கோவை ரேஸ்கோர்சில் உள்ளது. அந்த 3 இடங்களிலும் நேற்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். மர வியாபாரி சஜீவனுக்கு சொந்தமான 3 இடங்களிலும் தொழில் அதிபர் ஆறுமுகசாமிக்கு சொந்தமான 3 இடங்களிலும் என மொத்தம் 6 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இந்த சோதனை தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோடநாடு எஸ்டேட்டை தொடர்புபடுத்தி கோவையில் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை நடத்தப்பட்ட மணல் குவாரிகள் நடத்தி வந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, கோடநாடு எஸ்டேட்டில் சில கட்டுமான பணிகளை மேற்கொண்டவர். மர வியாபாரி சஜீவன் கோடநாடு எஸ்டேட்டில் பர்னிச்சர் வேலைகளையும் செய்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன’ என்றனர்.கோவை மற்றும் நீலகிரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story