மரணத்திலும் இணை பிரியாத தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு

கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள பொட்டப்பட்டியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 65). மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் துணை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பரணி(60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இருவரும் பொட்டப்பட்டியில் வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் விஸ்வநாதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பரணி திடீரென மயங்கி விழுந்துவிட்டார். உடனே உறவினர்கள் சிங்கம்புணரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுத்தடுத்து கணவன், மனைவி இருவரும் உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Related Tags :
Next Story