அமெரிக்க நாட்டு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவ ஊழியருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை


அமெரிக்க நாட்டு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவ ஊழியருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
x
தினத்தந்தி 10 Nov 2017 2:30 AM IST (Updated: 10 Nov 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க நாடு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவ ஊழியருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மைசூரு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மைசூரு,

அமெரிக்க நாடு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவ ஊழியருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மைசூரு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அமெரிக்க பெண்

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண் ஆதிவாசி மக்கள் குறித்து ஆராய்வதற்காக கடந்த 2015–ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். அவர் ராஜஸ்தான், புதுடெல்லி உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று தனக்கு தேவையான தகவல்களை சேகரித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் கர்நாடகத்திற்கு வந்தார்.

கர்நாடகத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் பின்னர் மைசூருவுக்கு வந்து தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அவருடைய உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மைசூருவில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

பாலியல் பலாத்காரம்

அங்கு அவரை டாக்டர்கள் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் ஒரு தனி அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று இரவு அவரை கவனிப்பதற்காக அந்த மருத்துவமனையில் மருத்துவ ஊழியராக பணியாற்றி வந்த மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா கே.தொட்டி. கிராமத்தைச் சேர்ந்த சுமித் என்பவர் பணியில் இருந்தார்.

இரவில் அந்த இளம்பெண்ணின் அறைக்கு சென்ற சுமித், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதனால் அந்த பெண் மிகவும் பாதிக்கப்பட்டார். தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் அவர் சொல்லாமல் இருந்து வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுமித், தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

25 ஆண்டுகள் சிறை

இதனால் மனமுடைந்த அந்த பெண் இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அவர்கள் இச்சம்பவம் குறித்து என்.ஆர். போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமித்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது மைசூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அவர் வழக்கில் குற்றவாளியான சுமித்திற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் சுமித்தை கைது செய்து மைசூரு சிறையில் அடைத்தனர்.


Next Story