அரசு பஸ் மோதி பள்ளி மாணவி பலி கிராம மக்கள் சாலை மறியல்
வடமதுரை அருகே அரசு பஸ் மோதி பள்ளி மாணவி பரிதாபமாக செத்தார். இதனை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வடமதுரை,
வடமதுரை அருகே உள்ள தீத்தாகிழவனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். அவருடைய மகள் கார்த்திகைராணி (வயது 14). இவர், அய்யலூரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு செல்லாமல் விடுப்பில் இருந்தார்.
தற்போது தீத்தாகிழவனூர் பகுதியில், நெடுஞ்சாலையில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் மாற்றி விடப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் தீத்தாகிழவனூரில் உள்ள பேசும் பழனியாண்டவர் கோவில் அருகே, திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கார்த்திகைராணி கடக்க முயன்றார்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த கார்த்திகைராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இது குறித்து தகவல் அறிந்த அவருடைய உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டனர்.
பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சாலையின் மையப்பகுதியில் உள்ள அரளி செடிகளால் எதிரே வருகிற வாகனங்கள் தெரிவதில்லை என்றும், இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் அந்த பகுதியில் வருகிற வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சாலையில் தடுப்புகள் வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.
கிராம மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story