பழைய கட்டிடம் சேதமடைந்ததால் தாய்ப்பால் புகட்டும் இடத்துக்கு மாறிய புறக்காவல் நிலையம்


பழைய கட்டிடம் சேதமடைந்ததால் தாய்ப்பால் புகட்டும் இடத்துக்கு மாறிய புறக்காவல் நிலையம்
x
தினத்தந்தி 10 Nov 2017 4:03 AM IST (Updated: 10 Nov 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

பழைய கட்டிடம் சேதமடைந்ததால் தாய்ப்பால் புகட்டும் இடத்துக்கு புறக்காவல் நிலையம் மாற்றப் பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவை பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் வாயிலில் போலீஸ் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த புறக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருந்து வருகிறார்கள்.

தற்போது இந்த புறக்காவல் நிலைய கட்டிடத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்துள்ளன. இதனால் கட்டிடம் எந்த நேரமும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது.

தாய்ப்பால் புகட்டும் இடம்

இதைத்தொடர்ந்து புறக்காவல் நிலையத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நகராட்சி சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்காக அமைக்கப்பட்ட தாய்ப்பால் புகட்டும் இடத்தில் செயல்பட்டு வருகிறது.

இதனால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இடமின்றி அவதிப்படுகின்றனர். மேலும் புதுவை பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கண் காணிப்பு கேமிராக்களும் செயல்படாத நிலை உள்ளது. இதனால் பஸ் நிலையத்தில் நடக்கும் குற்றங்களையும், குற்றவாளிகளையும் கண் காணிக்கமுடியாத நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை சரிசெய்ய போலீஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

Next Story