வள்ளியூர் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு நிதி நிறுவன உரிமையாளருக்கு வலைவீச்சு


வள்ளியூர் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு நிதி நிறுவன உரிமையாளருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Nov 2017 2:30 AM IST (Updated: 11 Nov 2017 12:07 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பழிக்கப்பட்டார்.

வள்ளியூர்,

வள்ளியூர் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பழிக்கப்பட்டார். இதுதொடர்பாக நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு

நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணா நகரை சேர்ந்தவர் குமார். இவர் பணகுடியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டம் செவ்வேரிவிளையை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை குமார் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அடிக்கடி ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் நெருங்கி பழகியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று குமார், அந்த பெண்ணுக்கு பழச்சாறு கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்து இருப்பது தெரியாமல் அந்த பெண்ணும் அதனை வாங்கி குடித்துள்ளார். இதனால் மயங்கிய அந்த பெண்ணை, குமார் கற்பழித்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அந்த பெண், தனக்கு நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

வலைவீச்சு

இதுதொடர்பாக குமாரிடம் அந்த பெண் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு, நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என அந்த பெண்ணை குமார் மிரட்டியுள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இதுகுறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கையற்கண்ணி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குமாரை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story