திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைபாதை அமைக்கும் பணி


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைபாதை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 11 Nov 2017 1:14 PM IST (Updated: 11 Nov 2017 1:14 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைபாதை அமைக்கும் பணியை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் 14 கிலோ மீட்டர் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். தற்போது கிரிவலப்பாதை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை காஞ்சி சாலையில் இடுக்கு பிள்ளையார் கோவில் அருகில், கிரிவலப்பாதை விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியான நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நடைபாதையில் அமைக்கப்பட்டு உள்ள கற்கள் பக்தர்கள் நடந்து செல்வதற்கு ஏற்ப உள்ளதா என்று வெறும் காலில் நடந்து பார்த்து சோதனை செய்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சாமியாரையும் அதில் நடக்க செய்தார்.

முன்னதாக கலெக்டர், திருவண்ணாமலை பெரிய தெரு, பவளக்குன்று மலை தெரு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற டெங்கு கொசு ஒழிப்பு பணியினை ஆய்வு செய்தார்.

Next Story