நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2017 1:36 PM IST (Updated: 11 Nov 2017 1:36 PM IST)
t-max-icont-min-icon

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையினால் சேதமடைந்த சம்பா சாகுபடி பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மழையால் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story