கல்யாண ராமன்..!
தாய்லாந்தில் பல தார மணம் சட்டப்படி குற்றம். அரசர் காலத்திலேயே இந்த நடை முறையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர்.
தாய்லாந்தில் பல தார மணம் சட்டப்படி குற்றம். அரசர் காலத்திலேயே இந்த நடை முறையை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர். ஆனால் இந்த நவீன காலத்திலும், ஒருவர் 120 பெண்களைத் திருமணம் முடித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புரோம்னீ மாவட்டத்தில் வசிக்கும் டாம்போன் என்பவர் தான் அந்த சர்ச்சைக்குரிய கல்யாண ராமன். சட்டத்துக்குப் புறம்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்ததோடு, அதை நியாயப்படுத்தி பேசும் கதையை கேளுங்கள்...!
“எனக்குத் தாய்லாந்து முழுவதும் தற்போது 120 மனைவிகள் இருக் கிறார்கள். 28 மகன்களும், 5 மகள் களும் இருக்கிறார்கள். யாரையும் ஏமாற்றி நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. பெண்கள், அவர்கள் குடும்பத்தினரின் அனுமதியோடுதான் திருமணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு திருமணமும் என்னுடைய அனைத்து மனைவிகளுக்கும் தெரியும். அவர்களின் சம்மதத்துடன்தான் செய்திருக்கிறேன். அதனால்தான் இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.
எனக்கு 17 வயதில் முதல் திருமணம் நடைபெற்றது. 3 குழந்தைகள் பிறந்தனர். அந்த சமயத்தில் தான் தொழிலதிபராகவும், அரசியல்வாதியாகவும் உயர்ந்தேன். நாடு முழுவதும் என் தொழில் விரி வடைந்தது. எங்கெல்லாம் கட்டிடம் கட்டப் போகிறேனோ அங்கெல்லாம் தங்க வேண்டியிருக்கும். அப்போதுதான் புதிய திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் வந்தது.
அதன்படி ஊருக்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, அந்த ஊரில் வேலைக்காகச் செல்லும்போது குடும்பம் நடத்திக்கொள்வேன். ஒவ்வொரு மனைவியையும் நான் மிகவும் மதிக்கிறேன், அன்பு செலுத்துகிறேன். அவர்களும் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். வீடு இல்லாத மனைவிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளேன். எல்லோரையும் பொருளாதார ரீதியில் சிறப்பாக வைத்திருக்கிறேன். பாங்காக்கில் சில கி.மீ. இடைவெளியில் 22 மனைவிகள் இருக்கிறார்கள். யாருமே சண்டையிட்டுக் கொண்டதில்லை. நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டாலும் இருவருமே என் மனைவிகள் என்று தெரியவந்தாலும் ஒரு புன்னகையால் கடந்து சென்றுவிடுவார்கள். நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தால் அனைத்து மனைவிகளிடமும் முறையாகத் தகவல் கொடுத்துவிடுவேன். சட்டப்படி எங்கள் திருமணத்துக்கு அனுமதி இல்லாவிட்டாலும், நான் பாரம்பரிய முறைப்படித்தான் திருமணம் செய்கிறேன். எனக்கும் பிரச்சினை இல்லை. என்னுடைய மனைவிகள், குழந்தைகளுக்கும் பிரச்சினை இல்லை” என்று பதற்றம் இல்லாமல் பேசு கிறார், டாம்போன். 58 வயதை நெருங்கியிருக்கும் இவர், உள்ளூர் அரசியல்வாதியாகவும், கட்டுமானத் தொழிலதிபராகவும் இருக்கிறார்.

Related Tags :
Next Story