குமரி மாவட்ட ஊர் காவல் படைக்கு வீரர்கள் தேர்வு
குமரி மாவட்ட ஊர் காவல் படையில் 70 காலி பணியிடங்கள் (ஆண்கள்–45, பெண்கள்– 25) உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு வீரர்களை தேர்வு செய்ய கடந்த சில நாட்களுக்கு முன் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட ஊர் காவல் படையில் 70 காலி பணியிடங்கள் (ஆண்கள்–45, பெண்கள்– 25) உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு வீரர்களை தேர்வு செய்ய கடந்த சில நாட்களுக்கு முன் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் ஊர் காவல் படைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நேற்று உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவை நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை முகாமில் நேற்று நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன், துணை சூப்பிரண்டு குமார் ஆகியோர் மேற்பார்வையில் இந்த தேர்வு நடந்தது. தேர்வில் ஆண்கள் 254 பேரும், பெண்கள் 23 பேரும் பங்கேற்றனர். இவர்களது உயரம், எடை ஆகியவை சரிபார்க்கப்பட்டது. இதற்காக அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதன் பிறகு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது.
Related Tags :
Next Story