டி.கே.சிவக்குமார் பெரிய ஊழல்வாதி எடியூரப்பா கடும் தாக்கு
மந்திரி டி.கே.சிவக்குமார் ஒரு பெரிய ஊழல்வாதி என்று எடியூரப்பா கூறினார்.
மங்களூரு,
மந்திரி டி.கே.சிவக்குமார் ஒரு பெரிய ஊழல்வாதி என்று எடியூரப்பா கூறினார்.
மாற்றத்திற்கான பயணம்
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘மாற்றத்திற்கான பயணம்’ என்ற பெயரில் பிரசார பயணத்தை தொடங்கினார். இந்த பயணம் நேற்று தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பி.ஜி. சாலையை வந்தடைந்தது. அப்போது எடியூரப்பா அங்கு குவிந்திருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். பின்னர் அவர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி கலந்து கொள்வார்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி மக்களுக்கு மாற்றத்தை கொண்டுவரவே இந்த ‘மாற்றத்திற்கான பயணம்’ எனும் பிரசார பயணத்தை தொடங்கி உள்ளேன். இதன் நிறைவு விழா வருகிற ஜனவரி மாதம் 28-ந் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நிறைவு விழாவின்போது நான் பல முக்கிய முடிவுகளையும், திட்டங்களையும் அறிவிப்பேன். இப்போதே அதை வெளியிடலாம். ஆனால் நான் கூறுவதைக் கேட்டு அதை அப்படியே நகல் எடுத்து சித்தராமையா செய்துவிடுவார். எனது கனவு, எனது லட்சியம் எல்லாமுமே கர்நாடகமும், கர்நாடக மக்களைப் பற்றியும்தான்.
டி.கே.சிவக்குமாரை சேர்க்க மாட்டோம்
ஏழைகளுக்காக பல நலத்திட்டங்களை அறிவிப்பேன். மூடநம்பிக்கைக்கு எதிராக சித்தராமையா பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகிறார். அவர் இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். அவர் வேண்டுமென்றால் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளுக்கு தடை விதிக்கட்டும். அப்போதுதான் அவர் உண்மையான நாத்திகவாதி.
இந்துக்களுக்கும், இந்து மத நம்பிக்கைகளுக்கும் எதிராக பேசி வரும் சித்தராமையா ஏன் உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றார். மந்திரி டி.கே. சிவக்குமாரை பா.ஜனதாவுக்கு இழுக்க நாங்கள் முயற்சி செய்து வருவதாக சித்தராமையா குற்றம்சாட்டி வருகிறார். இதில் உண்மை இல்லை. டி.கே.சிவக்குமாரை, பா.ஜனதாவில் நாங்கள் சேர்த்துக் கொள்ள மாட்டோம். அவர் பெரிய ஊழல்வாதி. அவரை சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
திப்பு சுல்தானின் ரத்தம் ஓடுகிறது
இதைதொடர்ந்து விழாவில் பேசிய கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஈசுவரப்பா பேசுகையில், “சித்தராமையாவின் உடலில் திப்பு சுல்தானின் ரத்தம் ஓடுகிறது என்று நினைக்கிறேன். அவர் தேவையில்லாமல் இந்துக்கள் மீது குற்றம்சாட்டி வருகிறார். இந்து மக்களுக்கு விரோதமாக பேசி வருகிறார். சித்தராமையா தனது பெயரை திப்பு சுல்தான் என்றே வைத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.
எடியூரப்பாவுக்கு நினைவுப்பரிசு
அதையடுத்து பேசிய ஷோபா எம்.பி., “வனத்துறை மந்திரி ரமாநாத் ராய் தனது தொகுதி மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார். இந்து அமைப்பு பிரமுகரான சரத் மடிவாளாவை நாம் இழந்துள்ளோம். முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக சித்தராமையா தலைமையில் ராஜதந்திர வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு செயல்பாடுதான் திப்பு ஜெயந்தி விழா” என்று கூறினார்.
அதைதொடர்ந்து விழாவில் எடியூரப்பா, ஈசுவரப்பா, மத்திய மந்திரி சதானந்தகவுடா ஆகியோருக்கு ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் எடியூரப்பாவுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story