பர்னிச்சர் கடையில் ரூ.15 ஆயிரம்-மடிக்கணினி திருட்டு


பர்னிச்சர் கடையில் ரூ.15 ஆயிரம்-மடிக்கணினி திருட்டு
x
தினத்தந்தி 12 Nov 2017 3:45 AM IST (Updated: 12 Nov 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

பர்னிச்சர் கடையில் ரூ.15 ஆயிரம்-மடிக்கணினி திருட்டு

பெரம்பலூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ஹசைன் (வயது 31). இவர், பெரம்பலூர் புதிய பஸ்நிலைய பகுதியில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையின் பின்புறத்தில் உள்ள சிமெண்ட் கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் சிலர், கடைக்குள் புகுந்து ரூ.15 ஆயிரம் மற்றும் மடிக்கணியை திருடி கொண்டு அதே வழியாக தப்பி சென்று விட்டனர். இதற்கிடையே கடையையொட்டியவாறே இருந்த ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்த ஹசைன் காலை எழுந்து பார்த்த போது கடையினுள் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் தான் பணம், மடிக்கணினி திருட்டு போனதை அறிந்து இது தொடர்பாக பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு திருட்டில் தொடர்புடைய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Related Tags :
Next Story