கொரடாச்சேரி அருகே வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பஸ் கவிழ்ந்தது; 15 பேர் படுகாயம்


கொரடாச்சேரி அருகே வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பஸ் கவிழ்ந்தது; 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Nov 2017 4:15 AM IST (Updated: 12 Nov 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவாரூர்,

கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த 40 பேர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவுக்கு பஸ்சில் புறப்பட்டனர். நேற்று அதிகாலை பஸ் கொரடாச்சேரி அருகே வந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பல இடங்களில் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டு இருந்தது. முகந்தனூர் மடப்புரம் என்ற இடத்தில் ஒரு வழிப்பாதையில் பஸ் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் கேரளா வயநாட்டை சேர்ந்த ஜெக்ரியா (வயது 60), அதே பகுதியை சேர்ந்த அனீஸ்பாத்திமா (54), அனிஷா (30), திரிஷம்மா (65), மேரி (65), பிலேமீனா (56), சுனிதா (36), சாஜன் (48) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெட்டாற்றில் அதிகமான தண்ணீர் செல்லும் நிலையில் பஸ் ஆற்றின் கரையில் கவிழ்ந்ததால் மிகப்பெரிய உயிரிழப்பு எதுவும் இன்றி தப்பியது. இதே பகுதியில் கடந்த மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற சுற்றுலா பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :
Next Story