திருப்பூரில் நொய்யல் ஆற்றோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்


திருப்பூரில் நொய்யல் ஆற்றோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 12 Nov 2017 3:30 AM IST (Updated: 12 Nov 2017 1:42 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நொய்யல் ஆற்றோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் சப்–கலெக்டர் உத்தரவு.

திருப்பூர்,

திருப்பூர் நொய்யல் ஆற்றை தூர்வாரி சுத்தம் செய்து, இரு கரைகளிலும் சாலை அமைக்கும் பணிகளை தொழில்துறையினர், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செய்து வருகிறார்கள். முதல்கட்டமாக நொய்யல் ஆறு தூர்வாரும் பணிகள் முடிந்தது. இதைதொடர்ந்து மணியக்காரம்பாளையம் பாலத்தில் இருந்து காசிப்பாளையம் பாலம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நொய்யல் ஆற்றை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. மேலும் ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்த பணிகளை திருப்பூர் சப்–கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொழில்துறை நிர்வாகிகள் உடனிருந்தனர். மணியக்காரம்பாளையத்தில் இருந்து காசிப்பாளையம் வரை நொய்யல் ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரியவந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், திருப்பூர் தெற்கு தாசில்தார் ஆகியோர் சேர்ந்து ஆற்றின் கரையோரம் அளவீடு செய்து விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய சப்–கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.


Next Story