நளினியை விடுதலை செய்ய வலியுறுத்தும் வகையில் தேசிய அளவில் பெண்கள் இயக்கம் தொடங்கப்படும்


நளினியை விடுதலை செய்ய வலியுறுத்தும் வகையில் தேசிய அளவில் பெண்கள் இயக்கம் தொடங்கப்படும்
x
தினத்தந்தி 12 Nov 2017 4:15 AM IST (Updated: 12 Nov 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

நளினியை விடுதலை செய்ய வலியுறுத்தும் வகையில் தேசிய அளவில் பெண்கள் இயக்கம் தொடங்கப்படும் வக்கீல் புகழேந்தி தகவல்

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேற்று வக்கீல் புகழேந்தி மத்திய சிறைக்கு சென்று சந்தித்து பேசினார். முதலில் பெண்கள் சிறையில் நளினியை சந்தித்து பேசிய அவர் பின்னர் முருகனை சந்தித்தார்.

அதன் பின்னர் வெளியே வந்த அவர் கூறியதாவது:-

வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்விடுதலை செய்ய வலியுறுத்தும் வகையில் தேசிய அளவில் பெண்கள் இயக்கம் ஒன்றை தொடங்க இருக்கிறோம். இந்திய மற்றும் சர்வதேச அளவிலான பெண்கள் இயக்கத்துடன் இணைந்து நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்த உள்ளோம்.

முன்விடுதலை கோரி நளினி இந்திய மற்றும் சர்வதேச மகளிர் ஆணையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், டிசம்பர் 10-ந் தேதி மனித உரிமை தினத்தை முன்னிட்டும் 10 ஆண்டுகளுக்குமேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பதை முன்வைத்து அதற்கும் தனி இயக்கம் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story