வினோதமான திருமண பந்தம்


வினோதமான திருமண பந்தம்
x
தினத்தந்தி 12 Nov 2017 7:13 AM GMT (Updated: 12 Nov 2017 7:13 AM GMT)

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் இருக்கிறது, மோரேனா என்ற மலை கிராமம். இந்த கிராமத்தில் ஆண்களை விட, பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

த்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் இருக்கிறது, மோரேனா என்ற மலை கிராமம். இந்த கிராமத்தில் ஆண்களை விட, பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதனால் திருமண விஷயத்தில் வினோதமான சம்பிரதாயத்தை பின்பற்றுகிறார்கள். ஒரு குடும்பத்தில் எத்தனை அண்ணன்-தம்பிகள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஒரு பெண்ணே மனைவியாகிறாள். இது கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும், மோரேனா கிராமத்தின் நடைமுறை இதுதான்.

ஒரு பெண், ஒரே ஆணை திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு எப்போதாவது அரங்கேறுகிறது. அதேநேரத்தில் 6 முதல் 8 ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண்களும் இருக்கிறார்கள்.

மோரேனா கிராமம் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங் களிலும் இதே பாரம்பரியத்தை கிராம சட்டமாக கடைப்பிடிக்கிறார்கள். “இதை வினோதமாக பார்க்காதீர்கள். இந்த பழக்கம், மகாபாரத கதையில் இருந்து பின்பற்றப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு குடும்பத்தில் பிறக்கும் 5 சகோதரர்களை திருமணம் முடிக்கும் பழக்கம் தொடங்கி, இன்று 8 ஆண்களை மணமுடிக்கும் வரை நீண்டிருக் கிறது. இதை கிராம பெண்கள் சாபமாக கருதுவதில்லை. வரமாக பார்க்கிறார்கள். ஏனெனில் பாஞ்சாலியை போன்று வாழ எங்களை போன்ற பெண்களுக்கு வரம் கிடைத்திருக்கிறது” என்று பேசுகிறார், ராஜோ வர்மா. மோரேனா கிராமத்தை சேர்ந்தவரான இவர், 5 சகோதரர்களை மணமுடித்து சந்தோஷமாக வாழ்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தபோதிலும், அவனது தந்தையை கண்டறிவது கடினமான காரியமாக சொல்கிறார். 

Next Story