இதயம் இதமாக
உணவுப்பழக்க வழக்கங்களை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் அதுவே உடல் நலனுக்கு கேடாக மாறிவிடும்.
உணவுப்பழக்க வழக்கங்களை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் அதுவே உடல் நலனுக்கு கேடாக மாறிவிடும். அதிலும் முறையற்ற உணவுப்பழக்க வழக்கங்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவித்துவிடும். இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுப் பழக்கங்களை பார்ப்போம்.
* மதிய உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பான பதார்த்தங்களை உண்பதை சிலர் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அவை சாப்பிட்ட மன நிறைவை கொடுக்கும் என்று கருதுகிறார்கள். உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பு வகைகளை ருசிப்பது இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும். உடலில் அதிக கலோரி சேர்வதற்கும் காரணமாகிவிடும். அதன் தாக்கமாக நீரிழிவு நோய், இதய நோய் உண்டாகக்கூடும். எனவே சாப்பிட்ட பிறகு இனிப்பு பலகாரங்களை ருசிப்பதை தவிர்க்க வேண்டும்.
* காரமான உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். மிதமான காரத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதேவேளையில் காரத்தின் அளவு அதிகரிக்கும்போது வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். மேலும் இதயத்திற்கும் பாதிப்பு உண்டாகிவிடும். இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் மிளகு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது இதயத்திற்கு நல்லது.
* உணவு வகைகளில் அதிக அளவு எண்ணெய் மற்றும் மசாலாவை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அவை இதயத்திற்கு நல்லதல்ல. அதேபோல் ஒரே வகையான சமையல் எண்ணெய்யையும் நீண்டகாலத்திற்கு பயன்படுத்தக்கூடாது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சமையல் எண்ணெய்யை மாற்றுவதும் நல்லது.
* அசைவ உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வரக்கூடாது. அதில் உள்ளடங்கிருக்கும் கொழுப்புகள் இதய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதிலும் அசைவ உணவுகளில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், துத்தநாகம் போன்றவற்றால் உணவு ஜீரணமாவதும் கடினமாகிவிடும். தொடர்ந்து சைவ உணவுகளை சாப்பிட்டு வருவது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்க வழிவகுக்கும். எப்போதாவது மீன், இறைச்சி வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் இருக்கும் புரதங்கள், ஒமேகா 3 கொழுப்புகள் இதயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
* உணவின் சுவையை கூட்டுவதற்காக உப்பை அதிகம் சேர்க்கக்கூடாது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை. உப்பு அதிகமாக சேர்க்கும்போது ரத்த அழுத்தம் உயரும். இது இதய நோய் உருவாக முக்கிய காரணமாகி விடும்.

Related Tags :
Next Story