நாகை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் தலைஞாயிறு பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது
நாகை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் தலைஞாயிறு பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு படகுகள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. மேலும் வேளாங்கண்ணியில் ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்து மீனவர் மாயமானார்.
வாய்மேடு,
நாகை மாவட்டத்தில் தொடர்ந்து 9 நாட்கள் கனமழை பெய்தது. இதில் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியில் அதிகபட்சமாக மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் வயல்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் முகாம்களில் உள்ள மக்களுக்கு தலைஞாயிறு பேரூராட்சி சார்பில் உணவு தயாரிக்கப்பட்டு படகுகள் மூலம் சென்று வழங்கப்பட்டு வருகிறது. நேற்று பகலில் நாகை, திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்யவில்லை.
தலைஞாயிறில் இருந்து உம்பளச்சேரி வழியாக கரியாப்பட்டினம் செல்லும் சாலையில் போக்குவாய்க்கால் உள்ளது. இந்த போக்கு வாய்க்காலில் தரைப்பாலம் கனமழை காரணமாக மூழ்கி அதற்கு மேல் தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் இடுப்பு அளவுக்கு மேல் செல்வதால் இந்த பாலத்தில் பொதுமக்கள் சென்று வர முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் பிராந்தியங்கரை, செம்பியமணக்குடி, வடமழை, மணக்காடு, கரியாப்பட்டினம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தலைஞாயிறு, திருமாளம், பழையாற்றங்கரை, வண்டல், குண்டூரான்வெளி, பிரிஞ்சுமூலை, மணக்குடி, உம்பளச்சேரி, ஆய்மூர், வாட்டாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேளாங்கண்ணியில் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் மாயமானார்.
வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பூக்காரத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது45). இவருக்கு சொந்தமான பைபர் படகில், ராஜூ மற்றும் அதேபகுதியை சேர்ந்த சூசைமாணிக்கம் (55), செல்வராஜ் (30), வீரமணி (27) ஆகிய 4 பேரும் நேற்று அதிகாலை செருதூர் வெள்ளையாற்றில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென கடல் சீற்றத்தால் படகு ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில் படகில் சென்ற 4 பேரும் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளனர். இதில் ராஜூ, செல்வராஜ், வீரமணி ஆகிய 3 பேரும் நீந்தி கரைக்கு வந்தனர். ஆனால் சூசைமாணிக்கத்தை காணவில்லை.
கடலில் விழுந்த சூசைமாணிக்கத்தை கடல் அலை இழுத்து சென்றிருக்கலாம் என்று கருதிய மீனவர்கள் உடனே அவரை கடலில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் படகு கவிழ்ந்ததில் ராஜூவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மீனவர்கள் வேளாங்கண்ணி போலீசார் மற்றும் கீழையூர் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கடலில் விழுந்து மாயமான சூசைமாணிக்கத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story