கார் கண்ணாடியை உடைத்து ரூ.78 ஆயிரம் திருட்டு

பாடாலூர்,
திருச்சி ராஜா காலனியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 50). இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் கோவில் முன்பு காரை நிறுத்தி விட்டு கோவிலுக்குள் சாமி கும்பிட சென்றனர். பின்னர் வெளியே வந்த போது கோவில் முன்பு நிறுத்தி இருந்த அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜரத்தினம் காரின் உள்ளே பார்த்தபோது காரில் கைப்பையில் வைத்திருந்த ரூ.78 ஆயிரம் பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ராஜரத்தினம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story