காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறை இல்லாமல் மருந்து-மாத்திரைகள் வழங்க வேண்டும்


காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறை இல்லாமல் மருந்து-மாத்திரைகள் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Nov 2017 4:00 AM IST (Updated: 13 Nov 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறை இல்லாமல் மருந்து-மாத்திரைகள் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரத்தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழுஉறுப்பினர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வட்டார தலைவர் பழனிசாமி, காரையூர் வட்டார தலைவர் பசீர் முகமது, மாவட்ட தலைவர் மோகன்ராஜ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கராத்தேகண்ணையன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி பணிகள் குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் பேசினர்.

தொடர்ந்து திருச்சியில் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ள கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு, அதிக அளவில் பொன்னமராவதியில் இருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்வது, தமிழகத்தில் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறை இல்லாமல் மருந்து-மாத்திரைகள் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும்.

பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதியில் குண்டும், குழியுமான சாலைகளை சரிசெய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story