சிட்லபாக்கம் அருகே சாலையோரம் நிறுத்தி இருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


சிட்லபாக்கம் அருகே சாலையோரம் நிறுத்தி இருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Nov 2017 10:15 PM GMT (Updated: 12 Nov 2017 7:35 PM GMT)

சென்னையை அடுத்த சிட்லபாக்கம் 2–வது பிரதான சாலையில் உள்ள சிட்லபாக்கம் போலீஸ் நிலையம் அருகே நிறுத்தி இருந்த கார் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த சிட்லபாக்கம் 2–வது பிரதான சாலையில் உள்ள சிட்லபாக்கம் போலீஸ் நிலையம் அருகே நிறுத்தி இருந்த கார் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆனால் அதற்குள் தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. காருக்கு அருகில் நிறுத்தி இருந்த மினி வேனுக்கும் தீ பரவியது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு கார் மற்றும் மினிவேனில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. மினிவேன் சிறிய அளவில் சேதம் அடைந்தது.

தீப்பிடித்து எரிந்த கார், சிட்லபாக்கம் போலீசாரால் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழக்கு சம்பந்தமாக கைப்பற்றப்பட்டு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஆனால் காரில் தீப்பிடித்தது எப்படி? என தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story