பாபநாசத்தில் 7,700 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் - எம்.பி. வழங்கினர்


பாபநாசத்தில் 7,700 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் - எம்.பி. வழங்கினர்
x
தினத்தந்தி 13 Nov 2017 4:00 AM IST (Updated: 13 Nov 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசத்தில் 7,700 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை அமைச்சர் துரைக்கண்ணு- வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

பாபநாசம்,

பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் பரசுராமன், பாரதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் கோபிநாதன், சூரியநாராயணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, அரசு வக்கீல் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி வரவேற்றார். விழாவில் அமைச்சர் துரைக் கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு, கும்பகோணம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த 39 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 7,700 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினர்.

காசோலை

இதை தொடர்ந்து மழையால் பாபநாசம் வட்டத்தில் வீடு இடிந்த 6 குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரமும், ,கால்நடைகளை இழந்த 3 பேருக்கு ரூ.42 ஆயிரமும், திருவையாத்துகுடியில் மின்னல் தாக்கி இறந்த முருகேசன் மனைவி வெண்ணிலாவிடம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி பேசினர்.

விழாவில் கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதிப்குமார், கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் ராஜலிங்கம், பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் நாகராஜன், நகர வங்கி தலைவர் நாகையன், துணை தலைவர் சபேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமையாசிரியர் மணியரசன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story