எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.735 கோடி மதிப்பில் 334 திட்டப்பணிகள் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.735 கோடி மதிப்பில் 334 திட்டப்பணிகள் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Nov 2017 4:30 AM IST (Updated: 13 Nov 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரூ.735 கோடி மதிப்பில் 334 திட்டப்பணிகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நெல்லை,

தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நேற்று நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. விழா தொடங்கியதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து நடந்த விழாவுக்கு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் பரிசு வழங்கினார். மேலும் தமிழக அரசின் சார்பில் நெல்லை மாவட்டத்தில் ரூ.43 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 187 கட்டிடங்களை திறந்து வைத்தார். ரூ.74 கோடியே 50 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான 5 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் நெல்லை மாவட்டத்தில் ரூ.57 கோடியே 40 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான 94 கட்டிடங்களுக்கும், ரூ.471 கோடியே 51 லட்சம் மதிப்பிலான 48 திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 34 ஆயிரத்து 655 பயனாளிகளுக்கு ரூ.87 கோடியே 73 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஆக மொத்தம் ரூ.734 கோடியே 66 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி பேசினார்.

இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட கோவில்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு தயாரிக்கப்பட்ட புதிய இணையதளத்தை வெளியிட்டார். கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சென்று வருவதற்காக புதிய பஸ் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயரமாலை அணிவித்து வீரவாள் பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர்ராஜூ, தங்கமணி, வேலுமணி, சண்முகம், அன்பழகன், சம்பத், கருப்பண்ணன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், கடம்பூர்ராஜூ, வெல்லமண்டி நடராஜன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி, டி.கே.ராஜேந்திரபாலாஜி, பென்ஜமின், நீலோபர் கபில், மணிகண்டன், பாஸ்கரன், வளர்மதி, பாண்டியராஜன், சேவூர்ராமச்சந்திரன், பாலகிருஷ்ணாரெட்டி, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், கே.ஆர்.பி.பிரபாகரன், வசந்திமுருகேசன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், சண்முகநாதன், செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.பி. பி.எச்.பி.மனோஜ்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் முருகையாபாண்டியன், இன்பத்துரை, செல்வமோகன்தாஸ்பாண்டியன், மனோகரன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், அகில உலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் இ.நடராஜன்(புறநகர்), ஜெரால்டு(மாநகர்), நெல்லை மாநகர் மாவட்ட பொருளாளர் தச்சை கணேசராஜா, சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் கபிரியேல்ஜெபராஜன், துணை செயலாளர் டென்சிங்சுவாமிதாஸ், சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் மகபூப்ஜான், வக்கீல் பிரிவு செயலாளர் திருமலையப்பன், அவைதலைவர் பீர்முகைதீன், இளைஞர் அணி இணை செயலாளர் ஜோதிபரமசிவன், துணை செயலாளர் ராசி காதர்மஸ்தான், விவசாய பிரிவு செயலாளர் முருகேசன், நாங்குநேரி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சுஜாதாராஜம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டிபாண்டியன், வடக்கு விஜயநாராயணம் இளைஞர் பாசறை செயலாளர் மனோஜ், நெல்லை திருமண்டல துணைதலைவர் பில்லி, குருத்துவ செயலாளர் ஸ்டீபன் செல்வின்ராஜ், பொருளாளர் தேவதாஸ் ஞானராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல்முருகன், முத்துசெல்வி, புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால்துரை, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ், மேலநீலிதநல்லூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் பால்ராஜ், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கண்ணன்,புறநகர் மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் லாசர், மஹாராஷ்டிரா மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமராஜ், மாவட்ட மாணவர் அணி பொருளாளர் செழியன், வள்ளியூர் ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகி முத்து, மாநில பாசறை இணை செயலாளர் சின்னத்துரை, பாசறை புறநகர் மாவட்ட பொருளாளர் பாலரிச்சர்ட், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், பதிவாளர் ஜான் டிபிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நன்றி கூறினார். 

Next Story