அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டி விற்பனை வரியில் இருந்து முழுவிலக்கு அளிக்கவேண்டும் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டி விற்பனை வரியில் இருந்து முழுவிலக்கு அளிக்கவேண்டும் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 14 Nov 2017 3:30 AM IST (Updated: 14 Nov 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன பொதுக்குழு கூட்டம் சின்னசேலத்தில் நடந்தது. இதற்கு மாநில தலைவர் துளசிங்கம் தலைமை தாங்கினார்.

சின்னசேலம்,

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன பொதுக்குழு கூட்டம் சின்னசேலத்தில் நடந்தது. இதற்கு மாநில தலைவர் துளசிங்கம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மோகன், பொருளாளர் சுப்பிரமணியம், ஆலோசகர் ஜெகதீசன், மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட அரிசி ஆலை சங்க தலைவர் அப்துல்ரஹீம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை சிறு மற்றும் நடுத்தர தொழில்ச்சாலைகள் ஆலோசகர் சிவஞானம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக விழுப்புரம் பொது மேலாளர் ராஜ்கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சங்க வளர்ச்சி மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள். சின்னசேலம் அரிசி ஆலை சங்க தலைவர் அருணாசலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கூட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டி விற்பனை வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கவேண்டும், அரிசி ஆலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கிடையே 5 சதவீத ஜிஎஸ்டி விற்பனை வரி விதிப்பால் ஏற்படும் குழப்பத்தை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல்–அரிசி வணிகர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் குபேரன் நன்றி கூறினார்.


Next Story