திருக்கோவிலூர் அருகே தரமற்ற குடிநீர் வினியோகம் செய்த நிறுவனம் பூட்டி ‘சீல்’ வைப்பு


திருக்கோவிலூர் அருகே தரமற்ற குடிநீர் வினியோகம் செய்த நிறுவனம் பூட்டி ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 14 Nov 2017 4:00 AM IST (Updated: 14 Nov 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே தரமற்ற குடிநீர் வினியோகம் செய்த நிறுவனத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனத்தில் தரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக நேற்று மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கணேசன், கதிரவன், ஜெயராஜ் ஆகியோர் அரகண்டநல்லூருக்கு விரைந்து சென்று அங்குள்ள குடிநீர் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த நிறுவனம் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெறாமலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமலும் கடந்த 6 மாதங்களாக இயங்கி வந்ததும், உணவு பாதுகாப்பு விதிகளை மீறி 20 லிட்டர் கேன்களில் தரமற்ற குடிநீர் வினியோகம் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குடிநீர் நிறுவன உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் அந்த குடிநீர் நிறுவனத்தை அதிகாரிகள் காலவரையின்றி பூட்டி ‘சீல்’ வைத்தனர்.


Next Story