பழங்குடியினர் பட்டியலில் சீர்மரபினரை சேர்க்க கோரி போராட்டம்
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்மரபினர் நல கூட்டமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மதுரை,
சீர்மரபினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், தமிழகத்தில் சீர்மரபினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்மரபினர் நல கூட்டமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அந்த அமைப்பின் பொது செயலாளர் மாரிமுத்து தலைமையில் ஏராளமானவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் கழுத்தில் மாலை அணிந்து பிணம் என எழுதப்பட்ட வாசகத்துடன் வந்த ஒருவரிடம் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்து போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். அதன்பின்னர் அந்த அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story