கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த தாய்–மகள் உள்பட 3 பேர் கைது
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அப்போது பைக்காரா பகுதியை சேர்ந்த நடராஜன்(வயது 62) என்பவர், தான் வேலை பார்த்த ஆலையில் இருந்து பணிக்கொடை தர வில்லை என்றும், முதியோர் பென்சன் வழங்க வேண்டும் என்றும் கூறி பையில் மண்எண்ணெய் கேனுடன் வந்தார். இதை பார்த்த சப்–இன்ஸ்பெக்டர் ஜவகர் அவர் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை பறித்து பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தினார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.
அதே போன்று வில்லாபுரம் பகுதியை சேர்ந்த செல்வி(58), அவரது மகள் ராஜலட்சுமி(34) ஆகியோரும் மண்எண்ணெய் கேனுடன் வந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story