கடலூர் குறைகேட்பு கூட்டத்தில் கந்துவட்டி கொடுமையில் இருந்து மீட்கக்கோரி தம்பதி திடீர் போராட்டம்
கடலூர் குறைகேட்பு கூட்டத்தில் கந்துவட்டி கொடுமையில் இருந்து மீட்கக்கோரி தம்பதி திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
நெல்லை மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து குடும்பத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்ததால், கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு வருபவர்களை போலீசார் தீவிரமாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்கிறார்கள். ஆனால் எதற்காக இசக்கிமுத்து குடும்பம் தற்கொலை செய்து கொண்டதோ, அதற்கு காரணமான கந்து வட்டி என்ற கொடுமைக்காரர்களிடம் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இதனால் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும், மீண்டும் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுக்கிறார்கள்.
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட காடாம்புலியூர் போலீஸ்சரகம் மேலிருப்பைச்சேர்ந்த சிவலிங்கம்(வயது 58), அவருடைய மனைவி தவமணி ஆகியோர் கடந்த 30-ந்தேதி கலெக்டர் அலுவலகத்துக்கு விஷபாட்டிலுடன் வந்து இருந்தனர்.
அந்த தம்பதியினர் வைத்திருந்த விஷபாட்டிலை பத்திரிகையாளர்கள் பறித்து தூரவீசியதால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு சென்றனர். ஆனால் 2 வாரங்கள் ஆகியும் அவர்கள் கொடுத்த மனு மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென தெரிகிறது.
இதனால் அவர்கள் இருவரும் நேற்று ஆளுக்கொரு அட்டையை கழுத்தில் தொங்கப்போட்டுக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்த அரங்குக்கு வெளியே தரையில் அவர்கள் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கழுத்தில் தொங்கப்போட்டிருந்த அட்டையில் கந்து வட்டிக்காரரிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தராவிட்டால் சாகும் வரை தொடர் உண்ணாவிரதம் என்று எழுதியிருந்தனர். அவர்களை புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சமாதானப்படுத்தி, காடாம்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து இருவரும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு காடாம்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், மேலிருப்பைச்சேர்ந்த அன்பழகன் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினோம். அசலும், வட்டியுமாக சேர்த்து ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் திருப்பிக்கொடுத்து விட்டோம், ஆனால் அவர் மேலும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தந்தால் தான் நில பத்திரத்தை தருவோம் எனக்கூறி எங்கள் நிலத்தை அபகரித்துக்கொண்டார். அவரிடம் இருந்து நில பத்திரத்தை வாங்கித்தராவிட்டால் சாவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை என்றார்.
அதேப்போல் காடாம்புலியூர் போலீஸ் சரகம் கருக்கை காலனியைச்சேர்ந்த சந்திரன் என்பவரும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டு, புகார் கொடுக்க தனது மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்தார். இவருக்கு அதே பகுதியைச்சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவர் 10 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்திருந்தாராம். அதற்கு அசல் மற்றும் வட்டி என ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை சந்திரனிடம் இருந்து ஆசிரியர் வாங்கிக்கொண்டாராம். ஆனால் 90 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்ததாக சந்திரனிடம் ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, பணத்தைக்கொடு அல்லது குடியிருக்கும் நிலத்தைக்கொடு என்று மிரட்டுகிறாராம். இது பற்றி சந்திரன், மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நேற்று புகார் கொடுத்துவிட்டு சென்றார்.

Related Tags :
Next Story