மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்


மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்
x
தினத்தந்தி 14 Nov 2017 4:00 AM IST (Updated: 14 Nov 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் குடிநீர், மின்சாரம், இலவச வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 165 மனுக்களை கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கீதாராணி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலசுந்தரம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நலத்திட்ட உதவிகள்

இதைத்தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5 பேருக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார். மேலும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

Related Tags :
Next Story