சம்பளம், போனஸ் வழங்க கோரி சர்க்கரை ஆலை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பளம், போனஸ் வழங்க கோரி சர்க்கரை ஆலை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Nov 2017 4:00 AM IST (Updated: 14 Nov 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம், போனஸ் வழங்க கோரி சர்க்கரை ஆலை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கபிஸ்தலம்,

சம்பளம் மற்றும் போனஸ் வழங்க கோரி கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் தியாகராஜன், இணைச்செயலாளர்கள் ஜெகதீசன், மகாலிங்கம், துணைத் தலைவர்கள் ராஜ்மோகன், சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சம்பளம் மற்றும் போனசை தடையின்றி வழங்க கோரி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story