தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 14 Nov 2017 4:25 AM IST (Updated: 14 Nov 2017 4:25 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது.

பெங்களூரு,

பெங்களூரு கோனனகுன்டே கிராஸ், கனகபுரா மெயின் ரோட்டில் அசோக் ரெட்டி என்பவருக்கு சொந்தமான ஆயத்த ஆடை தொழிற்சாலை உள்ளது. அந்த தொழிற்சாலை 4 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் அமைந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் திடீரென்று தொழிற்சாலையில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. மேலும் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த துணிகள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் தொழிற்சாலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது.

உடனே சம்பவ இடத்திற்கு முதலில் 14 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தார்கள். அவர்கள் தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள். மேலும் ராட்சத ஏணி மூலம் 3–வது மற்றும் 4–வது மாடியில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மேலும் 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் 5 மணிநேர போராட்டத்தை தொடர்ந்து தொழிற்சாலையில் பிடித்த தீ அணைக்கப்பட்டது.


Next Story