தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கக்கோரி கையெழுத்து இயக்கம்


தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கக்கோரி கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 14 Nov 2017 5:42 AM IST (Updated: 14 Nov 2017 5:42 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடந்தது.

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே மின்னூர் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதனை சுற்றி இருபுறங்களில் 20–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராம மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளும், விண்ணமங்கலம் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகளும், தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான் செல்ல வேண்டும்.

மேலும் மின்னூர் காளிகாபுரம், கணபதிநகர், லட்சுமிநகர், அரச பட்டு வளர்ச்சித்துறை பகுதியில் உள்ள பகுதிக்கு செல்ல சாலையை கடக்க வேண்டும். சாலையை கடந்து செல்வதற்கு வழி எவுதும் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலபேர் உயிர் இழந்துள்ளனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.


Next Story