தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்க வேண்டும் ஜோயல் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று மாநில தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று மாநில தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
குரூஸ் பர்னாந்துதூத்துக்குடி முன்னாள் நகரசபை தலைவர் குரூஸ்பர்னாந்து, கடந்த 1925–ம் ஆண்டு தூத்துக்குடி நகருக்கு தாமிரபரணி தண்ணீர் கொண்டு வந்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டார். சுமார் 30 ஆண்டுகள் தொடர்ந்து நகரசபை தலைவராகவும், மதம், இனம், மொழி பாகுபாடு இன்றி அனைத்து சமூக மக்களின் பாதுகாவலராகவும் இருந்து பணியாற்றினார். மக்களுக்காகவே சேவை செய்த தலைவர் குரூஸ்பர்னாந்துக்கு தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் முழுஉருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
மணிமண்டபம்இந்த பகுதியில் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை. சிலை அமைந்து உள்ள இடத்தின் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இந்த பகுதியில் குருஸ் பர்னாந்துக்கு முழுஉருவ வெண்கலச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும். மணிமண்டபத்தில் குரூஸ்பர்னாந்து வாழ்க்கை வரலாறு, சாதனைகள் குறித்த அனைத்து நிகழ்வுகளையும் ஓவியங்களாக வைக்க வேண்டும். இதன் மூலம் குரூஸ் பர்னாந்துக்கு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கூடுதல் பெருமை சேர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசியோடு, குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கப்படும்.
இவ்வாறு மாநில தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் தெரிவித்து உள்ளார்.