தண்டையார்பேட்டையில் பிரபல ரவுடியின் கூட்டாளி வெட்டிக்கொலை
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பிரபல ரவுடி கல்வெட்டு ரவியின் கூட்டாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சரமாரி வெட்டு சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ஜீவா (வயது 32). ரவுடி
ராயபுரம்,
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பிரபல ரவுடி கல்வெட்டு ரவியின் கூட்டாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ஜீவா (வயது 32). ரவுடியான இவர் மீது தி.மு.க. வட்ட செயலாளர் ஒத்தவாடை சண்முகம் கொலை வழக்கு மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. ஒத்தவாடை சண்முகம் கொலை வழக்கில், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி கல்வெட்டு ரவியும் கைது செய்யப்பட்டார். ஜீவா, கல்வெட்டு ரவியின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகே ஜீவா நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், ஜீவாவிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஜீவாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில், பலத்தகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் நேற்று அதிகாலை ஜீவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு கும்பலுக்கும், குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்த கும்பலுக்கும் இடையே திருட்டு செல்போன் தொடர்பாக கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில், ஒரு பிரிவினருக்கு ஆதரவாக ஜீவா செயல்பட்டதாக தெரிகிறது, இதனால், ஆத்திரத்தில் இருந்த மற்றொரு கும்பல் ஜீவாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்த அரிபாபு உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.