சென்னை புறநகர் குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் புறநகர் குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது.
சென்னை,
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பழவந்தாங்கல், கிண்டி, மேடவாக்கம், செம்பாக்கம், சேலையூர், சுண்ணாம்புகுளத்தூர் உள்பட பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விட்டுவிட்டு மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடைவிடாது மழை கொட்டியது. மழை நேற்றும் விட்டு, விட்டு பெய்தது.
இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. ஏற்கனவே பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகள் நிலைமை மேலும் மோசமாகி உள்ளன. தண்ணீர் வடிந்த பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
பள்ளிக்கரணை, கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம் ஊராட்சி பகுதிகள், நாராயணபுரம் ஏரி அருகில் உள்ள அண்ணாநகர், மடிப்பாக்கம் மகாலட்சுமி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசத்தொடங்கி உள்ளது.
இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழையால் சென்னையில் உள்ள அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல சாலைகள் சேதம் அடைந்து உள்ளன. குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, மாதவரம், திருவொற்றியூர், எண்ணூர், மணலி, செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. சாலைகளில் தேங்கி கிடந்த மழைநீரால் மாணவ- மாணவிகள் நேற்று பள்ளிகளுக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டனர். தொடர் மழையால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story