வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 4 பவுன் நகை திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
மணமேல்குடியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 4 பவுன் நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மணமேல்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி செங்குந்தர் புரம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 56). இவர் மனைவி இந்திராணியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமாரசாமி தனது மனைவியுடன் தஞ்சாவூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை தஞ்சாவூரில் இருந்து தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்து 4 பவுன் தங்க நகைகளை மர்மநபர்களை திருடி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சுபின்னர் இது குறித்து குமாரசாமி மணமேல்குடி போலீசிஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்–இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரசாமியின் வீட்டில் நகைகளை திருடிய மர்மநபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என வலைவீசி தேடி வருகின்றனர்.