தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது


தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது
x
தினத்தந்தி 15 Nov 2017 3:45 AM IST (Updated: 15 Nov 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 45). இவரது தம்பி செந்தில்குமார்(40). கூலித்தொழிலாளி. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அழகுதுரை உருட்டு கட்டையால் செந்தில்குமாரை தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story