விவசாய உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
விவசாய உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் என்று வேலூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வேலூர்,
வேலூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. உதவி கலெக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள், அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
வேளாண்மைத்துறையில் புதிதாக என்னென்ன திட்டங்கள் வந்துள்ளது என்றும், என்னென்ன சலுகைகள் உள்ளது என்றும் விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். கோட்ட அளவில் விவசாயிகள் கூட்டம் நடத்துவது போன்று வட்ட அளவிலும் நடத்தவேண்டும். திருமணி அருகே பாலாற்றில் மணல் அள்ள தடைவிதிக்க வேண்டும்.
பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று விவசாய உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி. யை ரத்து செய்யவேண்டும். ஆற்காடு, குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி வழியாக உயர்அழுத்த மின்சார வயர் செல்கிறது. இதனால் பாதிக்கப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்.
பென்னாத்தூர் பேரூராட்சியில் பிறப்பு, இறப்பு சான்று வழங்குவதற்கு ஆஸ்பத்திரியில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதற்கான சான்று கேட்கிறார்கள். இந்த சான்று இல்லாமல் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை கூறினர்.
இதற்கு பதிலளித்து அதிகாரிகள் கூறியதாவது:-
விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும்.
தேசிய வேளாண்மை திட்டத்தில் 18 முதல் 24 வயது வரை உள்ள படித்த இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகையுடன் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதன்மூலம் அரசு மற்றும் தனியார் விவசாய பண்ணைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். பைப்லைன் நீர்பாசனத்திற்கு 50 சதவீத மானியமும், சொட்டுநீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story