கோவில்பட்டி, எட்டயபுரத்தில் தானிய சேமிப்பு கிடங்குகள் முதல்வர் 22–ந் தேதி திறந்து வைக்கிறார்


கோவில்பட்டி, எட்டயபுரத்தில் தானிய சேமிப்பு கிடங்குகள் முதல்வர் 22–ந் தேதி திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 16 Nov 2017 2:30 AM IST (Updated: 15 Nov 2017 8:06 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் தானிய சேமிப்பு கிடங்குகளை, வருகிற 22–ந் தேதி(புதன்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் தானிய சேமிப்பு கிடங்குகளை, வருகிற 22–ந் தேதி(புதன்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

கூட்டுறவு வார விழா

கோவில்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில் கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது. கூட்டுறவு விற்பனை சங்க துணை தலைவர் ரமேஷ்மூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் செல்வகோகிலா வரவேற்று பேசினார்.

மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் அருளரசு பேசினார். கூட்டுறவு சார்பதிவாளர்கள் சாமி, குருசாமி, கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் பொன்மாடன், செண்பகசுப்பு, அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தானிய சேமிப்பு கிடங்குகள்

முன்னதாக கோவில்பட்டி கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக வளாகத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பயிறு வகைகளை அரைக்கும் எந்திரத்தையும், ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 100 டன் கொள்ளளவுடைய தானிய சேமிப்பு கிடங்கையும் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் அருளரசு பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘எட்டயபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக வளாகத்திலும் ரூ.39 லட்சம் செலவில் 500 டன் கொள்ளளவுடைய தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி, எட்டயபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தானிய சேமிப்பு கிடங்குகள், பயிறு வகைகள் அரைக்கும் எந்திரத்தை வருகிற 22–ந்தேதி தூத்துக்குடியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைப்பார்‘ என்று தெரிவித்தார்.


Next Story