கந்து வட்டி புகார்: பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு
நெல்லையில் கந்து வட்டி புகார் தொடர்பாக பெண்கள் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பெண்கள் மீது வழக்கு பாளையங்கோட்டை செந்தில்நகரை சேர்ந்த கணேசன் மனைவி பாலசரசுவதி (வயது 40). இவர், கடந்த 2015–ம் ஆண்டு கொக்கிரகுள
நெல்லை,
நெல்லையில் கந்து வட்டி புகார் தொடர்பாக பெண்கள் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பெண்கள் மீது வழக்குபாளையங்கோட்டை செந்தில்நகரை சேர்ந்த கணேசன் மனைவி பாலசரசுவதி (வயது 40). இவர், கடந்த 2015–ம் ஆண்டு கொக்கிரகுளம் குருந்துடையார் தெருவில் குடியிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி சுப்புலட்சுமி (45), தங்கபாண்டி மனைவி மல்லிகா (65) ஆகியோரிடம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.
வட்டியுடன் சேர்த்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனாலும் மேலும் ரூ.78 ஆயிரம் தர வேண்டும் என்று அந்த 2 பெண்கள் பாலசரசுவதி வீட்டுக்கு சென்று கேட்டு வந்தனர். இதுகுறித்து அவர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி, சுப்புலட்சுமி, மல்லிகா ஆகியோர் மீது கந்து வட்டி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் ஒருவர்நெல்லை டவுன் குன்னத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகநயினார். இவர் கடந்த 1993–ம் ஆண்டு தனது வீட்டை அடமானம் வைத்து நெல்லை டவுனை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்கு மாதம்தோறும் வட்டி செலுத்தி வந்தார். ஆனாலும் தர்மலிங்கம், ஆறுமுகநயினார் வீட்டை எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆறுமுகநயினார் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நெல்லை டவுன் போலீசார், தர்மலிங்கம் மீது கந்து வட்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.