பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த விவசாயிக்கு 10 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு


பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த விவசாயிக்கு 10 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Nov 2017 3:45 AM IST (Updated: 16 Nov 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த விவசாயிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த கானலாபாடி பகுதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 37), விவசாயி. இவர், கடந்த 2014-ம் ஆண்டு நம்பியந்தல் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மாணவி மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து சில நாட்கள் கழித்து மாணவி, விஜயனுடன் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வழக்கானது திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டு, கடத்தல் வழக்காக மாற்றப்பட்டது. பின்னர் மாணவியை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.

10 ஆண்டு ஜெயில் தண்டனை

இதுதொடர்பான வழக்கு திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி மகிழேந்தி (பொறுப்பு) குற்றம் சாட்டப்பட்ட விஜயனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட விஜயன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

தண்டனை பெற்ற விஜயன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :
Next Story