‘ரெட் அலர்ட் ஆபரேஷன்’ திருச்சி மாநகர் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனை
திருச்சியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி,
திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ரெட் அலர்ட் ஆபரேஷனை நடத்த போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ரெட் அலர்ட் ஆபரேஷன் என்பது சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் ஏதாவது ஒரு இடத்தில் சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்தால் அந்த தகவல் கேள்விபட்டதும், உடனடியாக அனைத்து போலீசாருக்கும் ரெட் அலர்ட் என்ற செய்தி மைக் மூலம் அனுப்பப்படும்.
இந்த தகவலை தொடர்ந்து அடுத்த 10 நிமிடத்தில் 168 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபரின் அங்க அடையாளங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர் கூறிய தகவல்கள் அடிப்படையில் 168 இடங்களிலும் வாகன சோதனை நடத்தும் போலீசாருக்கு மைக் மூலம் தெரிவிக்கப்படும். உடனே அந்த அடையாளத்துடன் வரும் வாகன ஓட்டியை போலீசார் மடக்கி பிடிப்பார்கள்.
திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது ரெட் அலர்ட் ஆபரேஷனில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை ரெட் அலர்ட் ஆபரேஷன் நடத்தப்பட்டது. மாநகரில் 168 இடங்களிலும் போலீசார் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முறை சங்கிலி பறிப்பு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.
இருப்பினும் போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி, போலீஸ்காரர் ஒருவரையே சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வதுபோல் மாநகர பகுதிகளில் வலம் வர வைத்தனர். ஆனால் அந்த போலீஸ்காரர் ரெட்அலர்ட் சோதனையில் சில நிமிடங்களிலேயே சிக்கினார். ஒத்திகையாக இந்த சோதனை நடத்தி பார்க்கப்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story