நெல்லை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு


நெல்லை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2017 2:00 AM IST (Updated: 16 Nov 2017 5:38 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கூடங்குளம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம், நவலடி, சங்கனான்குளம், மேலக்கல்லூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அந்தந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும், கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, நவலடி, ஆற்றங்கரைபள்ளி வாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், வடக்கு விஜயநாராயணம், ஆண்டான்குளம், சங்கனான்குளம், பெரியம்மாள்புரம், ஏழாங்கால், ஜந்தாங்கால், பட்டர்கட்டிவிளை, சிவந்தியாபுரம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி மற்றும் பக்கத்து கிராமங்களுக்கும், மேலக்கல்லூர், சேரன்மாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கரன்திரடு ஆகிய ஊர்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

மூலைகரைப்பட்டி

அதேபோல் மூலைகரைப்பட்டி, வன்னிகோனேந்தல், கரந்தானேரி, கங்கைகொண்டான், கரிசல்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடான்குளம், வன்னிகோனேந்தல், மூவிருந்தாளி, தடியம்பட்டி, பன்னீருத்து, மேலஇலந்தைகுளம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்குபனவடலி, நரிக்குடி, சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானான்குளம், சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, ஆளவந்தான்குளம், செழியநல்லூர், கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி ஆகிய ஊர்களுக்கு நாளை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை அந்தந்த துணை மின்நிலையங்களின் மின்செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story