‘அரசு நிர்வாகம் செய்ய கவர்னருக்கு அதிகாரம் கிடையாது’ கோவையில் அன்புமணி ராமதாஸ் பேட்டி
‘அரசு நிர்வாகம் செய்ய கவர்னருக்கு அதிகாரம் கிடையாது’ என்று கோவையில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
கோவை,
ஈரோடு அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விமானம் மூலம் நேற்றுக்காலை கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜ்பவனில் எந்த அதிகாரியை வேண்டுமானாலும் கவர்னர் அழைத்து பேசலாம். ஆனால் கவர்னர் அன்றாட நிர்வாகம் செய்யக் கூடாது. அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் துணைநிலை ஆளுனருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. ஆனால் இங்கே மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கவர்னர் ஆய்வு நடத்துவது ஜனநாயகத்துக்கு அழகல்ல. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கவர்னர் இப்படி நடந்து கொள்வது கிடையாது. எனவே கவர்னர் ஏதாவது ஆலோசனை நடத்த வேண்டுமென்றால் அதிகாரிகளையோ, முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்களையோ அழைத்து பேச வேண்டும். அந்த அதிகாரம் தான் அவருக்கு இருக்கிறது.
தமிழகத்தில் சட்டம்- ஓழுங்கு, நிர்வாகம் கிடையாது. நம் உரிமைகளை நாம் இழந்து வருகிறோம். ஆய்வு நடத்துவது குறித்து கவர்னர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை போக போகத் தான் பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் அத்தனை கட்சிகளும் சேர்ந்து ஜனாதிபதியை சந்திக்கலாம்.
இந்த பகுதியில் அதிகம் உற்பத்தியாகும், கிரைண்டர் மற்றும் பட்டாசு, கடலை மிட்டாய், என்ஜினீயரிங் பொருட் கள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். நெடுஞ்சாலைகளின் ஓரம் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்ததே பாட்டாளி மக்கள் கட்சி தான். அதன்படி தமிழகத்தில் 3 ஆயிரத்து 321 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால் அதன்பிறகு குறுக்கு வழியில் 3 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்திருக்கிறார்கள். இது மோசமான நடவடிக்கை. ஜெயலலிதா மதுக்கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று கூறினாா. ஆனால் அவர் வழியில் ஆட்சி செய்கிறோம் என்று கூறுபவர்கள் ஜெயலலிதா கொள்கைக்கு எதிராக மூடிய கடைகளை திறந்துகொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி பெண்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.
கமல்ஹாசன் அரசியலுக்கு வரட்டும். வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள ஆற்று மணலை எடுக்க கூடாது என்று நான் சமீபத்தில் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளேன். கர்நாடகா. கேரளா ஆகிய மாநிலங்களில் ஆற்றுமணலை எடுக்க கூடாது என்ற தடை உள்ளது.
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை சசிகலா குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களிடமும் நடத்தியிருக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை அரசு எடுத்து மக்களிடம் கொடுக்க வேண்டும். இதற்கு முன்பு வருமானவரித்துறையினர் நடத்திய சோதனைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுபற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story